வல்லபாய் படேல் சிலை முட்டாள் தனமானது…இங்கிலாந்து எம்.பி…!!
பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இங்கிலாந்திடம் இருந்து நிதியுதவி பெற்ற இந்தியா, சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது, முட்டாள் தனமானது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு சிலை வைத்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடமிருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
dinasuvadu.com