வறட்டுஇருமலுக்கு உடனடி தீர்வு…
வறட்டு இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இருமல் விரைவில் குணமாகும்.
50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கலந்து விடவேண்டும். இதனை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.
மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.
5 கிராம் சித்தரத்தை எடுத்துக்கொண்டு அதோடு உலர்ந்த திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்தால் இருமல் குணமாகும். ஒரு டம்ளர் வெந்நீரில் இரண்டி டீஸ்பூன் தேன் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைத்து அருந்தவும். இதன் மூலம் இருமல், சளி சரியாகும்.