வருமானவரி சோதனை..படப்பிடிப்பு என்னாச்சு..?இயக்குநர் அதிரடி
நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்ற நிலையில் அது நிறைவடைந்தது.இந்த விவகாரம் தொடர்பாக சினி உலகமே பரபரப்பாக காணப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வருமான வரித்துறை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே நடிகர் விஜய்க்கு சம்மன் கொடுத்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பரபரப்பான இந்த சூழ்நிலையில் நேற்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிவிட்டாராம்.இதனால் எந்த தோய்வும் ஏற்படாமல் படம் குறித்த நாளுக்கு வெளியாகும் என்று மும்முரமாக செயல்பட தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.