வரலாற்று படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ்..!ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது
- வரலாற்று படத்தில் நடிக்க களமிரங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
- 100 பட்ஜெட்..தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் இந்த படம் என்று நடிகை நம்பிக்கை
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வலம் வந்தவர் நடிகையர் திலகம் என்று வர்ணிக்கப்படும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருதினை பெற்றவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தை படக்குழு அன்மையில் வெளியிட்டது.இது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் 4வது குஞ்சலி மரைக்கார் வீரம் நிறைந்தவராக போற்றப்படுகிறார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராகி உள்ளது. படத்தில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கிறார். அவர் நடித்த படங்களில் இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்
படம் சுமார் ரூ.100 கோடி செலவில் தயாராகி உள்ளது. படம் வருகிற மார்ச் மாதம் 26ந்தேதி திரைக்கு வருகிறது.அவ்வாறு படம் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.இந்நிலையில் இப்படம் தனக்கு மகாநடி தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று கீர்த்தி சுரேஷ் நம்பிக்கையாக உள்ளராம்.