வரலாற்று சிறப்புமிக்க இரு நாட்டு எல்லையில் சந்தித்த வடகொரிய -தென்கொரிய அதிபர்கள்!
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தென் கொரிய எல்லையையும்,வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரிய எல்லையையையும், கடந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கடந்த 1953ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை கடப்பதும், வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்தித்து கைகுழுக்கிக் கொள்வதும் இதுவே முதல்முறை.
கிம் ஜாங் உன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இருநாட்டு எல்லையில் நின்று கைகுழுக்கிக் கொண்டனர். பின்னர் மூன் ஜே இன், கிம் ஜாங் உன்-னை தென் கொரிய எல்லைக்கும், கிம் ஜாங் உன் மூன் ஜே இன்னை தென்கொரிய எல்லைக்கும் அழைத்துச் சென்றார்.
பின்னர், தென் கொரியாவிற்கு சென்ற கிம் ஜாங் உன், வருகையாளர் பதிவேட்டில் “புதிய வரலாறு தற்போது தொடங்கியுள்ளது. நாங்கள் தற்போது சமாதான காலத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்” என்று எழுதியுள்ளார்.
இந்த வரலாற்று நிகழ்வுக்கு தென் கொரிய மற்றும் வட கொரிய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த வரலாற்று நிகழ்வு உலகம் முழுவதும் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.