வரலாற்றில் முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்திய குடியரசு தின விழா…!!
இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்தோனேசியா,சிங்கப்பூர்,வியட்நாம்,மலேசியா,தாய்லாந்து,மியான்மர்,பிலிப்பைன்ஸ்,புருனே,லாவோஸ்,கம்போடியா ஆகிய 10 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்டின் குடியரசு தின நாளன்று வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன் படி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர்.