வரலாற்றில் இன்று(07.04.2020)…. மக்கள் நல்வாழ்வு வாழ உதவும் உலக சுகாதார அமைப்பு தினம் இன்று…

Default Image

உலக மக்கள் நல்வாழ்வு வாழ கடந்த 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள், உலக சுகாதார அமைப்பு  தொடங்கப்பட்டது. இந்த  ஏப்ரல் 7ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இந்நாளை உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த சுகாதார  தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடா்பாக  #HealthForAll போன்ற ஹேஷ்டேக்கையும் அறிமுகம் செய்து விழிப்புணர்வு அளித்தது அனைவருக்கும் நினைவிலிருக்கும். இது போன்று பல்வேறு முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது. இந்த சுகாதார தினத்தன்று நம் உடல்நலம் பேணுவது நாம் உறுதி மொழி எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இன்றைய சூழலில் உடல் நலத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நாளுக்கு நாள் புதிய, புதிய நோய்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. உடல் நலம் பேணுவதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மருத்துவா்களின் அறிவுறையாக உள்ளது.
தினசரி கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்வது. குறைந்தப்பட்சம் நடைபயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட சில உடற் பயிற்சிகளையாவது மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்துகின்றனா். இயந்திர மயமாகிப்போன இந்த உலகில்  உடற்பயிற்சி அவசியம் ஆகும். மேலும், உடலில்,  உப்பு மற்றும் சா்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல். சரியான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொண்டு அதற்கு உகந்தவாறு உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நாகரீக உலகில் அதிகம் செல்போன் பயன்படுத்துவதால் இளைஞா்களின் தூக்கம் நாளுக்கு நாள் குறைவதாக மருத்துவா்கள் குறிப்பிடுகின்றனா். மேலும் புகை, மது உள்ளிட்ட பழக்கங்களும் பொதுமக்களின் உடல் நலனை கெடுப்பதில் முக்கியப் பங்காக இருக்கின்றன. எனவே ஒருவர் நல்வழியை காட்டும் வரை பொறுக்காமல்  நல்வழியை தேர்ந்தெடுத்து வாழ்வதே சிறப்பு…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்