வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றார்!
இரண்டு நாள் பயணமாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சீனா சென்றுள்ளார். ஏர் கோர்யோ ((air koryo)) விமானம் மூலம் அவர் பெய்ஜிங் சென்றடைந்தார். கடந்த 4 மாதத்தில் கிம் ஜோங் உன் சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.
இன்றும், நாளையும் அவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு, பேச்சுவார்த்தை தொடர்பாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் கிம் ஜோங் உன் விவரிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பின் போது இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் உடனான சந்திப்புக்குப் பின்னர் முதன் முறையாக கிம்-ஜோங்-உன் சீனா சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.