வடகொரியா எச்சரிக்கை! அமெரிக்கா- தென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சியை நிறுத்தாவிட்டால் டிரம்புடனான சந்திப்பு ரத்து!
வடகொரியா,அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு விமானப்படை பயிற்சியை நிறுத்தாவிட்டால் டொனால்டு டிரம்புடனான – கிம் ஜோங் உன்னின் சந்திப்பு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.
அண்மையில் வட மற்றும் தென்கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேசிய நிலையில் விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, தென்கொரியாவின் வருடாந்திர கூட்டு விமானப் படைப் பயிற்சி தென்கொரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுப் பயிற்சியை ஒரு படையெடுப்பைப் போல் வடகொரியா கருதுவதாகவும், இதனை நிறுத்தாவிட்டால் பேச்சுவார்த்தை சந்திப்பு ரத்து செய்யப்படும் என்றும் வடகொரிய மத்திய செய்தி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.