வங்கிக்கடன் வட்டி தொகை ரத்து….அசத்திய நாராயணசாமி…உற்சாகத்தில் மாற்றுத் திறனாளிகள்…!!
புதுச்சேரி மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள், வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா, சித்தன்குடியில் நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது பேசிய அவர், மத்தியில் மாற்று ஆட்சி இருப்பதால்தான், மாற்றாந்தாய் பிள்ளையைப் போன்று, புதுச்சேரி நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.புதுச்சேரியில், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.இதனால் புதுச்சேரி மாநில மாற்று திறனாளிகள் உற்சாகமடைந்துள்ளனர்..
dinasuvadu.com