பஹ்ரைன் நாட்டின் பிரதமர் காலமானார்.!

Published by
Ragi

உலகின் மிக நீண்ட காலம் பிரதமர் என்ற பெருமையை பெற்ற பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலிஃபா காலமானார்.

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் ஷேக் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா. 1971ல் இருந்து பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்தார் . 84 வயதான இவர் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பஹ்ரைன் நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவரது உடல் திருப்பி அனுப்பிய பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் , அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஹ்ரைன் நாட்டின் இளவரசரான ஷேக் கலிஃபா காலமானதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உத்தியோகபூர்வ துக்கத்தை அனுசரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதனுடன் அரசாங்க அமைச்சகங்கள் உள்ளிட்டவைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற ஷேக் கலிஃபாவிற்கு 2017ஆம் ஆண்டு உலக அமைதிக்கான கலாச்சார விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago