ரோஹித்தை பார்த்து நடுங்கும் கோலி..!! கிழி கிழினு கிழிக்கும் நெட்டிசன்கள் :
ரோஹித் சர்மாவை கண்டு விராட் கோலி பயப்படுவதாகவும், வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித், கோலி ஓரங்கட்டுவதாகவும் ரோஹித்தின் ரசிகர்களும் நெட்டிசன்களும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி மிரட்டும் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சத்தங்களை விளாசி சாதனை படைத்துள்ள ரோஹித், டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் மூன்று சத்தங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இந்நிலையில், ரோஹித்துக்கு தொடர்ந்து அணியில் இடம் மறுக்கப்படுவதற்கு கோலி தான் காரணம் என ரோஹித்தின் ரசிகர்கள் கருதுகின்றனர். அதனால் கோலியை விமரிசித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ரோஹித்தை கண்டு கோலி பயப்படுவதாகவும் ரோஹித்தை வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டுவதாகவும் விமர்ச்சித்துள்ளார்.