ரூ 4,39,41,00,00,000…கேட்டு கையேந்தும் பிரதமர்…புதிய பிரதமருக்கு வந்த சோதனை..!!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் பல்வேறு புதிய புதிய நடவடிக்கையை செயல்படுத்தி வந்தார்.இந்நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க, சவுதி அரேபியா அரசு முன்வந்துள்ளது. சவுதியில் நேற்று தொடங்கிய எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார்.
துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் முதலீட்டு மாநாட்டை புறக்கணித்த நிலையில், சவுதி அரேபிய அரசின் சிறப்பு அழைப்பை ஏற்று, இம்ரான் கான் பங்கேற்றுப் பேசினார். இந்நிலையில், கச்சா எண்ணெய் கடன்களை செலுத்த 3 பில்லியன் டாலரும், இதர செலவீனங்களுக்கு 3 பில்லியன் டாலரும் நிதி உதவி வழங்க சவுதி அரேபியா அரசு முன்வந்துள்ளது.
DINASUVADU