ரூ 2,770,00,00,000 சேதம்..77 பேர் பலி…ஒடிசா புகாரை போட்ட டிட்லி புயல்…!!

Default Image
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 19 பேரின் உடல்களை தேடி வருகிறோம். கஜபதி மாவட்டத்தில் அதிகமாக 42 பேரு, கஞ்சம் மாவட்டத்தில் 10 பேரும் பலியாகி உள்ளனர்.
மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,770 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்