ரூபாய் 1,46,00,000 ஆட்டைய போட்ட பாஜக அமைச்சர்..!!

Default Image

மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே மும்பை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான வரியை நிலுவையில் வைத்து வருவதாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒர்லி பகுதியில் மும்பை மாநகராட்சியின் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கத்திற்கு சொந்தமான 31 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இதிலுள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வசித்தும், நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர். அங்கு நிறுவனங்களை நடத்துவதற்காக மும்பை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பலரும் ஏமாற்றி வருகின்றனர் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநில பாஜக அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான பங்கஜா முண்டே 3 கடைகளை நடத்தி வருகிறார். இதற்காக கட்ட வேண்டிய சுமார் 1 கோடியே 46 லட்சம் ரூபாயை செலுத்தாமல் இழுத்தடித்து வருவது தெரியவந்துள்ளது.

இதேபோன்று ஏற்கனவே தில்லியில் பங்கஜாவின் கணவரின் நிறுவனத்தின் பேரில் வாங்கிய சொகுசு காருக்கு வரி செலுத்துவது தொடர்பாக இவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் தற்போது பிஜேபி கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்