ராஜபக்ச மகன் நமலுக்கு அமெரிக்காவில் தடை..!
ரஷ்ய அரசின் அழைப்பை ஏற்று, ரஷ்யாவில் கடந்த 18-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில்,இலங்கை எம்.பி.யாக உள்ள நமல் ராஜபக்ச தேர்தல் பார்வையாளராக மாஸ்கோ சென்றார். அங்கிருந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் செல்ல நமல் திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து நமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “விமானத்தில் ஹுஸ்டன் செல்ல மாஸ்கோ விமான நிலையம் சென்றேன்.
ஆனால், என்னை விமானத்தில் ஏற்ற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி தடுத்துவிட்டனர். இதற்கு இலங்கையின் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதாலோ அல்லது ரஷ்யாவிலிருந்து செல்ல முயற்சித்ததாலோ தடுத்திருக்கலாம் என கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.