ராகுல் காந்தியால் தேசத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது : தமிழிசை சவுந்தரராஜன்….!!
திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியால் தேசத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்றார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வழங்கியிருக்கும் விவசாய கடன் தள்ளுபடி என்பது வெறும் கண்துடைப்பு என விமர்சித்த தமிழிசை, திருமண விழாவிற்காக தனியார் நிறுவன விமானத்தில் பயணித்த ஸ்டாலின், மக்கள் பயனடையும் வகையில் அமைக்கப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.