ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை !சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் நடப்பது வேறு !
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய குழப்பம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த வாரத்தில், அந்நாட்டு ராணுவம் நடத்திய ரசாயனத் தாக்குதல் நடத்தியதையடுத்து, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ராணுவ முகாம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா தாக்குதல்களை முன்வைத்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சிரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது உலகளாவிய குழப்பத்தை விளைவிக்கும் என்றும் விளாடிமிர் புடின் அந்த அறிக்கை மூலமாக எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.