ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை? வெளியான தகவல்!
ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்று நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், தனது பொறுப்பை அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரின் சமூகவலைத்தள தகவலை சுட்டிக்காட்டி அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் இதழ், இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது அவரது தோற்றத்திலேயே தெரிவருவதாகவும், அண்மை காலமாக அவர் படபடப்பாக இருப்பது காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புடினுக்கு புற்றுநோயுடன், பார்க்கின்சன் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நேரத்தில் புடின் தனது அதிபர் பொறுப்பை விலக உள்ளதாகவும், இவருக்கு பதில் அந்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் நிகோலாய் பெத்ருஷேவ்-விடம் ஒப்படைக்க உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் நியூயார்க் போஸ்ட் இதழ் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 69 வயதான புடின் ஏற்கனவே அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏப்ரல் இரண்டாம் பாதியில் அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது, ஆனால் தாமதமானது என தகவல் கூறப்படுகிறது.