ரஷ்யா செல்கிறார் கிம் ஜோங் உன்..!

Default Image

ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று வருகிற செப்டம்பர் மாதம் அந்நாட்டுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் செல்ல உள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் சென்டோசா தீவில், அமெரிக்கா அதிபரை சந்தித்து கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் வட கொரியா நாடாளுமன்ற குழுத் தலைவர் கிம் யோங் நாம், மாஸ்கோ நகருக்கு சென்று விளக்கி கூறினார்.

அமெரிக்க, வடகொரிய அதிபர்களின் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறினார். அப்போது ரஷ்யாவுக்கு வருமாறு கிம் ஜோங் உன்னுக்கு , புதின் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று செப்டம்பர் மாதம் ரஷ்யாவுக்கு வருவதாக கிம் ஜோங் உன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்