ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்கள் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்டது!
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்கள் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிஷ்னி நவ்குரோட் ((Nizny Novgorod)) என்ற இடத்தின் வான்வெளியில் கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சத்துடன், நீள்வட்ட வடிவிலான பொருள் ஒன்று கடந்து சென்றது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பறக்கும் தட்டும் என்றும், வேற்றுகிரகவாசிகளின் வாகனம் என்றும் பயந்து நடுங்க, அதன் பின்னரே வானில் பறந்தது ரஷ்யாவின் சோயுஸ் 2 பாயின்ட் 1 பி என்ற விண்வெளி ஓடம் என்பது தெரியவந்தது.
பிளஸ்டெஸ்க் காஸ்மோட்ரோம் ((Plesetsk Cosmodrome)) என்ற இடத்தில் ஏவப்பட்ட அந்த விண்வெளி ஓடம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காணவந்த ரசிகர்களை உற்சாகப் படுத்த அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.