ரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்!ரசிகர்களால் ஏற்பட்ட நிலநடுக்கம்
மெக்ஸிக்கோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் செயற்கையானது என நிலநடுக்கத்தை அளவீடு செய்யும் குழு தெரிவித்துள்ளது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோவிற்கு எதிரான உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று (17.06.18) மெக்ஸிகோவில் நடைபெற்றது. இப்போட்டியில் மிக எளிதாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெற்றி பெறும் என ரசிகர்களால் கணிக்கப்பட்ட நிலையில், மெக்சிகோ அணி கடும் சவாலை அளித்தது. ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில், மெக்சிக்கோ வீரர் H. Lozano கோல் அடித்து அணியை 1க்கு 0 என முன்னிலை பெற வைத்தார்.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியை, மெக்சிகோ வீரர்கள் முறியடித்தனர். இதனையடுத்து ஆட்ட இறுதியில் 1க்கு 0 என்ற கணக்கில் மெக்சிக்கோ வெற்றி பெற்றது. இதனால் உற்சாகமடைந்த மெக்ஸிகோ மக்கள், சந்தோஷத்தில் குதித்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்பொழுது சிறியட்தாக ஒரு நில நடுக்கத்தை தாங்கள் உணர்ந்ததாக பெரும்பாலான மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிலநடுக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்த வல்லுனர்கள், இது இயற்கையானது அல்ல; கொண்டாட்டத்தில் மக்கள் குதித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம், கால்பந்தாட்டத்தின் 35வது நிமிடத்திற்கு அடுத்த 7 வது நொடியில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.