ரஷியாவில் உள்ள ஒரு பகுதிக்கு கூடங்குளம் என்று பெயர்…!!
ரஷியாவில் உள்ள ஒரு பகுதிக்கு கூடங்குளம் என்று பெயர் சூட்டப்பட்டது
ரஷியாவின் தென்பகுதியில் உள்ள வால்கோடான்ஸ்க் என்ற நகரில் கூடங்குளம் அணு மின் உற்பத்தி செய்யும் ‘ஆட்டமாஷ்’ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு அருகில் உள்ள சிறிய பகுதிக்கு கூடங்குளம் என்று அந்நாட்டு அரசு பெயர் சூட்டி உள்ளது.தமிழகத்தில் உள்ள கூடங்குளம் 3–வது யூனிட்டுக்கு தேவைப்படும் நீராவி உற்பத்தி சாதனங்கள் ஆட்டமாஷ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த தகவல் ரஷிய அரசின் அணுசக்தி நிறுவனமான ‘ரோசட்டம்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com