ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி செய்வது எப்படி ..?

Default Image

தேவையான பொருட்கள் :

மட்டன்  1 கிலோ
அரிசி  1 கிலோ
எண்ணை  100 கிராம்
டால்டா  150 கிராம்
பட்டை  2 துண்டு (இரண்டு அங்குலம்)
கிராம்பு  ஐந்து
ஏலக்காய்  முன்று
வெங்காயம்  1/2 கிலோ
தக்காளி  1/2 கிலோ
இஞ்சி  3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு  2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி  ஒரு கட்டு
புதினா  1/2 கட்டுப. மிள்காய்  8
தயிர்  225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள்  3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி  1 பின்ச்
ரெட்கலர் பொடி  1 பின்ச்
எலுமிச்சை பழம்  1நெய்  ஒரு டீஸ்பூன்

செய்முறை :

முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.
நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.

ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளறவும்

அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளறவும். பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும்.
கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்

ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து தூவி விடவும். அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்