ரசிகரை தாக்கிய சபீர் ரகுமானுக்கு கிரிகெட் விளையாட 6 மாத தடை, மைய ஒப்பந்தமும் ரத்து
வங்கதேச வீரரான சபீர் ரகுமான் தனது உள்நாட்டில் கிரிகெட் போட்டியின் போது தன்னை கிண்டல் செய்ததாக கூறி ஒரு 12 வயது ரசிகரை அடித்து உதைத்திருந்தார். அதனை நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தோம். இந்நிலையில் அவருக்கு தண்டனை வழங்கும் விதமாக அந்நாட்டு கிரிகெட் வாரியம் அவருக்கு தடை விதித்துள்ளது.
அவருக்கு ரூ.15 லட்சம் அபராதமும், 6 மாதம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தடையும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளானார். வங்கதேச வீரர்களுக்கு தேசிய ஒப்பந்தமானது இந்த வருடம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரகுமானுக்கு இவாறு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவர் ரசிகரை தாக்கியதை ரிசர்வ் நடுவர் பார்த்து விட்டார் பின்னர் ஆட்ட நடுவரிடம் புகார் அளித்துள்ளார், ஆனால் ஆட்ட நடுவரோ சபீரை விசாரணைக்கு அழைக்க அவரையும் கடுமையாகத் திட்டியுள்ளார் சபீர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் தன் அறிக்கையில் தெரிவிக்கும் போது, ‘அனைத்து வீரர்களுக்கும் கடுமையான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம் அதுவும் இந்த புது வருட நாளில், ஒருவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி அவர் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவராக இருப்பது அவசியம்’ என்று தெரிவித்துள்ளது.
வங்கதேச வீரர்கள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி வங்கதேசத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்து கொள்வதாக வங்கதேச கிரிகெட் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
source : dinasuvadu.com