யோகா செய்தால் ஆயுள் கூடும் அதிமுக அமைச்சர் பேச்சு…!!

Default Image

யோகா செய்தால் ஆயுள் கூடும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான சுகாதார உணவை சாப்பிடுவதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான சைக்கிள் பேரணி நடந்து வருகிறது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்து, கன்னியாகுமரி வழியாக சிவகாசி வந்தடைந்தது.
மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகாசியில் பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.ராதாகிருஷ்ணன் எம்பி, கலெக்டர் சிவஞானம், எஸ்.பி. ராசராசன், சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
ஸ்வஸ்த் யாத்திரை என்ற பெயரில் நடக்கும் இந்த பேரணியில், ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி டெல்லி சென்றடைய உள்ளது.
மேற்கிந்திய உணவுகளை சாப்பிடுவதால், உடல் பருமன் அதிகமாகி, பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது. மாணவர்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை ஆரோக்கியமான முறையில் பேணிகாக்க வேண்டும்.சுகாதாரமான வாழ்கை வாழ்வதற்கு, சிறிது சிறிதாக வாழ்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சுகாதாரமான வாழ்கை என்பது, சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு முறைகள் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். தினமும் யோகா செய்ய வேண்டும். நான் 25 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன்.இன்றைய தலைமுறையினர் யோகா செய்வதை பழகிக்கொள்ள வேண்டும். அதனால் ஆயுள் கூடும்.மேற்கண்டவாறு அவர் பேசினார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest