மூழ்கிய குழந்தை…காப்பாற்றிய டெலிவரி பாய்…வைரலாகும் வீடியோ…!!
குழந்தையை டெலிவரி பாய் காப்பாற்றிய வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது
சீனாவில் உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் செய்த மனிதாபிமான செயல் லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. ஜெஜியாங் மாகாணத்தின் சோஷிங் நகரில் உள்ள ஆற்றின் அருகே 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் 6 வயது மதிக்கத்தக்க குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டது. பின்னர் அந்த குழந்தை ஆற்றில் தத்தளிக்க தொடங்கியது. அருகில் இருந்த மற்றொரு குழந்தை இதனைப் பார்த்து கத்தியது.
அப்போது அந்த வழியாக பைக்கில் டோர் டெலிவரி செய்யும் இளைஞர் சென்று கொண்டிருந்தார். இந்த காட்சியை பார்த்ததும், பைக்கை நிறுத்தி விட்டு ஆற்றுக்குள் குதித்து குழந்தையை காப்பாற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
DINASUVADU