மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம்!சிரியாவின் மீது அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து தாக்குதல்!
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கூட்டுப்படைகள் சிரியாவின் ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் உலகளவில் மூன்றாம் உலகப்போர் மூளூம் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியா அரசுக்கு சொந்தமாக இருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் நோக்கத்துடன் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் கிளர்ச்சியாளார்கள் வசமிருக்கும் கிழக்கு கட்டா பகுதி முதல் டூமா நகரம் வரை சிரியாவின் ராணுவ படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த ரசாயன தாக்குதல்களை சுட்டிக்காட்டி சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததார்.இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸின் ராணுவ படைகளும் அமெரிக்காவிற்கு ஆதரவாக தாக்குதல்களில் பங்கேற்றன. இந்த தாக்குத்ல்கள் நடைபெற்ற சில மணி நேரத்திற்குள் ரஷ்ய அதிபர் புதினிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டது. அத்துடன் சிரியாவில் இருக்கும் ரஷ்ய படை மீது அமெரிக்க படையினர் ஏதேனும் தாக்குதல் நடத்தினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க கூடும் என்ற எச்சரிக்கையையும் புதின் விடுத்தார்.
அதே வேளையில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்ககூடாது என்று ட்ரம்ப் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தரப்பிலிருந்து அவசரமாக ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டப்பட்டது. இதில் சிரியாவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை ரஷ்யா கொண்டுவந்தது. ஆனால் அந்த தீர்மானத்துக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் வாக்களித்ததை தொடர்ந்து ரஷ்யாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சிரியா விவகாரத்தில் ரஷ்யா அமெரிக்க நாடுகள் எந்த நேரத்திலும் மோதிக்கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் பட்சத்தில் மூன்றாவது உலகப்போருக்கு அது வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.