மூட்டுத் தேய்மானதிற்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் தேன்..,
இயற்கையாக தேனிகள் மூலம் கிடைக்கும் தேன் மிகவும் சுவை உடையதாக இருக்கும்.எந்த அளவுக்கு சுவை உள்ளதோ அதே அளவுக்கு அதில் மருத்துவ பண்புகளும் அதிகமாக இருகின்றது.மேலும் தேனில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும்.
வறட்டு இருமள் குணமாக தேனுடன் நெல்லிக்காய்க்களைத் துண்டு துண்டாக்கி அதனுடன் சிறிதளவு ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
மூட்டுத் தேய்மானம், வலி நீங்க மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து. தேனை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுதும் உணவு உட்கொண்டாலும் ஒரு தேக்கரண்டி தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். இதனால் மூட்டுகள் தேயாது, மூட்டுக்கள் வலிக்காது.எலும்புக்கு வலிமை சேர்க்கிறது.