முஸ்லிமை நிறுத்தியதால் தோற்றோம்..!! பிஜேபி MLA சர்சை பேச்சு
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான் தேர்தலில் தோற்றோம்: பாஜக எம்எல்ஏ
இந்நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மாஹித்பூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ளவர் பாஜகவை சேர்ந்த பகதூர் சிங் சௌஹான்.அண்மையில், மத்தியப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
இதுதொடர்பாக தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்த சிவராஜ் சிங் சௌஹான், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 6 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், அவர்கள் அனைவருமே தோல்வியடைந்துவிட்டனர். இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது என்றார். இதனிடையே, பகதூர் சிங் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.