முல்லை பெரியாறு ஆக. 31 வரை 139.9 அடியாக இருக்க வேண்டும்..!!உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆக. 31 வரை 139.9 அடியாக வைத்திருக்க வேண்டும்.நீர்மட்டம் அதிகரிக்காமல் இருப்பதை அணையின் துணை குழு கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர்ந்தது இதில் கேரள வெள்ளத்துக்கு காரணம் முல்லை பெரியாறு அணையில் திறந்துவிட்ட தண்ணீரே காரணம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு முல்லை பெரியாறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளம் ஏற்படவில்லை கேரளாவில் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டதே காரணம்.இடுக்கி அணை திறந்த 4 நாட்கள் பிறகே பெரியாறு அணை திறக்கப்பட்டது என தெரிவித்தது.இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU