முன்னாள் தென்கொரிய அதிபர் லீ மியுங் பேக் மீது ஊழல் குற்றச்சாட்டு…!
லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மியுங் பேக் மீது சுமத்தப்பட்டுள்ளன. லீ மியுங் பேக் 2008-2013காலக்கட்டத்தில் தென்கொரிய அதிபராக இருந்தபோது சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம், இந்திய மதிப்பில் 65கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சியோல் நீதிமன்றத்தில் லீ மியுங் பேக் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான நிறுவனம் 200கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் வரி ஏய்ப்புச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களின்பேரில் கடந்த மாதம் 22ஆம் தேதி கைது செய்யப்பட்ட லீ மியுங் பேக் இப்போது சிறையில் உள்ளளார்.
லீ மியுங்குக்குப் பின் அதிபராக இருந்த பார்க் கியுன் ஹை ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அந்த வழக்கில் அவருக்கு 24ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.