முத்தத்தின் அருமை..! அதை கொடுப்பவருக்கே தெரியும்..!
அன்பின் முதல் மொழி முத்தம்.முத்தம் என்பது வெறும் காமத்தை மட்டும் சார்ந்தது இல்லை. முத்தம் என்பது புனிதமான ஒன்று .அன்பு, நட்பு, பாசம், நேசம், காதல் என அனைத்து வகையான அன்பிற்கும் அடையாளமாக இருப்பது முத்தம். ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்கின்றனர். அதை வெளிபடுத்தும் உறவுகளுக்கு ஏற்ப அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகின்றன.
காதலர்களும், தம்பதிகளும் தங்கள் இணையின் இதழில் முத்தமிடும் பொழுது கண்களை மூடிக் கொள்வதுண்டு. பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். ஏன் திரைப்படங்களில் கூட முத்தமிட்டுக் கொள்வது போல நடிக்கும் போது கண்களை தானாக மூடிக் கொள்வார்கள்.
இது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான அதாவது முத்தம் மற்றும் தாம்பத்தியம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் அன்னிச்சை செயல்பாடுதான் இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.
நெருக்கமான ஒரு உறவுடன் அதாவது கணவன் மனைவி, காதலர்களுக்கு இடையேயான உணர்வு தொட்டு உணர்ந்து அதன் உணர்வை அனுபவிக்கும் போது நமது மூளை அதனை காட்சியாகவும், மன பிம்பமாகவும் உருவகம் செய்ய தூண்டுகிறதாம். அதனாலும் கூட முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்கிறது. முத்தமிடும் போது காதலர்களின் மத்தியில் உண்டாகும் காட்சி திறனை வைத்து தான் கண்கள் மூடுவது கண்டறியப்படுகிறது.
உணர்வு நிலை அல்லது இறுக்கம் அதிகரித்தாலோ, தீண்டுதல் வீரியம் அடைந்தாலோ முத்தமிடும் நேரம் அல்லது அளவு நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெருக்கமான உறவுகளுடன் இருக்கும்போது இந்த புணர்ச்சி மேலோங்கும்.