முதல் முறையாக கலப்பு குழு ஓட்டம் : இந்தியாவுக்கு வெள்ளி
இதுவரை 4X 400 மீட்டர் குழு ஓட்டப்போட்டி ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தான் நடந்துள்ளது.ஆனால் தற்போது இந்தனோசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக கலப்பு குழு போட்டி நடைப்பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியில் அனாஸ், பூவம்மா, ஹீமா தாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்தியா 3:15.71 நிமிடங்களில் ஓடி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. மூலம் இந்தியா 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.