முதல் கிருஸ்த்துமஸ், முதல் கிருஸ்துமஸ் மரம், கேரல், விடுமுறை என முதல் கிருஸ்துமஸ் அனுபவங்கள்

Default Image

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை உருவானது சுவாரஸ்யமான நிகழ்வு. அதன்படி, “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம்தான் உருவானது. இயேசு பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிடபட்டு தோராயமாக டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதலில் கொண்டாடியவர்கள் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் என சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் சிலர் அதனை ஏற்றுகொள்ள மறுத்து ஜனவரி 6ம் தேதி கிறிஸ்துமசை கொண்டாடினர்.

அதன்பிறகு கிபி 800-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றுதான் சார்லிமேனி என்ற அரசன் பதவியேற்றான். அதனை தொடர்ந்து, கிபி.855ஆம் ஆண்டு இட்முண்ட் என்றவர் மன்னராக மூடி சூட்டப்பட்டார். மேலும், கிபி.1066-ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் மன்னராக முடிசூட்டப்பட்டார். கிபி.1377ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் என்பவர்தான்  கிறிஸ்துமஸ் பண்டிக்கையை வெகு விமர்சியாக கொண்டாடினார். கடந்த கிபி.1643-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டது, அந்த புதிய தீவுக்கு ‘கிறிஸ்துமஸ் தீவு’ என்று பெயரிடப்பட்டது.

இவ்வாறு, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. அதன் பின்னர், கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வது என பலவாறு கிருஸ்துமஸ் கொண்டாடப்டுகிறது.

கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், கிபி.1510ஆம் ஆண்டு ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கிபி.1836ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. கிபி.1840ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் உருவானது. முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டது கிபி.1847ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்