முதல்வர் எடப்பாடி பதவி விலக வேண்டும்… ஆ.ராசா பேட்டி…!!

Default Image

முதல்வர் பதவியை விட்டு விலகி எடப்பாடி சிபிஐ விசார ணையை சந்திக்க வேண்டும் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.
திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நேற்று அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக அரசியல் அச்சம் காரணமாக முதல்வர் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஏதேதோ கூறி வருகிறார். ஊழலுக்காக திமுக தோற்றுவிக்கப்பட்டது என்றும், திமுக ஆட்சியில் பெரிய ஊழல்  நடந்துள்ள தாகவும் கூறியுள்ளார்.இந்திய வரலாற்றில் எப் போதும் இல்லாத அளவுக்கு முதல்வராக இருந்த ஜெய லலிதா மீது உச்ச நீதிமன்றம் என்ன கருத்து கூறியது என் பதை அவர் மறந்து விட்டார்.
அரசியல் சட்டத்தை படுகொலை செய்த குற்றவாளி என்று கூறியது. இந்த குற்ற வாளிக்கு ஏவல் செய்த எடப் பாடியும் மற்ற அமைச்சர்களும் தங்கள் ஊழல் வெளிவந்து விடுமோ என்ற அச்சத்தில் திமுக தலைவர் மீதும், திமுக மீதும்  பழி சுமத்துகிறார்கள்.டெண்டர் விட்டத்தில் நடந்த ஊழல் பற்றிய புகாரில் போதிய ஆதாரம் இருந்ததால் தான் உயர் நீதிமன்றம் சி.பி. அய். விசாரிக்க உத்தரவிட்டது.
திமுக அமைச்சர்கள் யார் மீதாவது குற்றம்  நிரூபிக்கப் பட்டிருக்கிறதா?. என் மீது பழி சுமத்தப்பட்டதும் அதை எதிர் கொண்டு பதவியை  விட்டு விலகினேன். விசாரணையை சந்தித்து விட்டு வெளியே வந்திருக்கிறேன். ஆனால், எடப்பாடி தன் மீதான விசா ரணையை சந்திக்க  அஞ்சுவது ஏன்?. அவர் பதவியை விட்டு விலகி சி.பி.அய். விசா ரணையை சந்திக்க வேண்டும். அதற்கு பதில் மேல்முறையீடு செய்வது ஏன்?.
திமுக அமைச்சர்ள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கூற எடப்பாடிக்கு தகுதி இல்லை. டெண்டர் விடு வதற்கு உலக வங்கி விதித்த விதிமுறையில் வர்த்தக ரீதியான உறவு, ரத்த உறவை  அகற்றி விட்டு நெருங்கிய உறவு என்று அதை மாற்றியிருக்கிறார்கள். அப்படி நெருங்கிய உறவுக்கு சட்டத்தில் விளக்கம் இல்லை என்று கூறு கிறார்கள். இது நீதிமன்றத்தை திசை திருப்புவதாகும். எடப் பாடிக்கு தைரியம் இருந்தால்  என்னோடு ஒரே மேடையில் இதுகுறித்து விவாதிக்க தயாரா? அதிமுக அரசின் ஊழ லுக்கு மத்திய அரசு துணை போகிறது. எனவே, இவர்கள் மத்திய அர சுக்கு அடிவருடியாக இருக்கி றார்கள்.
திமுக 13.6.2018இல் புகார் தருகிறது. ஒரு மாதம் கழித்து ரைடு நடத்தப்படுகிறது. அப்போது 163 கோடி ரூபாயும், 100 கோடி தங்கமும் கைப் பற்றப்படுகிறது. ஒரு மாதம் முன்பே ரைடு நடத்தியிருந்தால் இன்னும் பெருமளவு  கிடைத் திருக்கும்.  ஆனால், மத்திய அரசு அவர்களை தப்ப விட்டு விட்டது. இந்த ஆட்சியில் ஆன்லைன் மூலம் விடப்பட்ட டெண்டர்கள், அதில் பங்கேற்ற வர்கள் பற்றிய விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட  வேண்டும் என்று  அவர் கூறினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்