முதலமைச்சர் தலைமையில் வரும் 24-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!!
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் வரும் 24-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், மேகேதாட்டு மற்றும் ஸ்டெர்லைட் உள்ளிட் விவகாரங்களில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.