முடிவுக்கு வருகிறது முரளி விஜய்யின் கிரிக்கெட் வாழ்க்கை …?

Default Image

இந்திய டெஸ்ட் அணியின் அனுபவ தொடக்க வீரர் முரளி விஜயின்   கிரிக்கெட் வாழ்க்கை அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக முன்னாள் பவுலர் அஜித் அகர்க்கர்  கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் டி 20 இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காவிட்டாலும் டெஸ்ட் அணியில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் நிரந்தர தொடக்க வீராக இருந்து வந்தார். தற்போது இங்கிலாந்து தொடரில் சரியாய் ஆடாததால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது.

2008ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முரளி விஜய், கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறார். 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3907 ரன்களை குவித்துள்ளார். இந்தியாவிலும் வெளி நாட்டிலும் சிறப்பாகவே ஆடிவந்த முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் சரியாக ஆடவில்லை. இந்திய அணிக்கு பலமுறை சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார் முரளி விஜய்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார் முரளி விஜய். அதுவும் அந்த ரங்களும் முதல் டெஸ்டில் எடுக்கப்பட்டதாகும்.இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட முரளி விஜய்க்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் சேர்க்கப்பட்டார். மூன்றாவதுடேஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்