முடிய வெட்டு இல்ல ஆட்டத்த விட்டு நடையகெட்டு..!!நடுவரின் இனவெறி தாக்குதல்..! சாடும் சமூகவலையதளம்..!!

Default Image

அமெரிக்காவைச் சேர்ந்த  மைக் ஃபிரான்கிள் என்ற ஊடகவியலாளர் ஓருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு விளையாட்டு அரங்கில் ஒரு மாணவருக்கு பெண் ஒருவர் தலைமுடியை அங்கேயே வெட்டி விடுகிறார். இந்த வீடியோ உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி நகரில் கடந்த வியாழன் அன்று உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொள்ள வந்த ஆண்ட்ரூ ஜான்சன் என்கிற 17 மாணவன் தனது தலையில் அதிக முடி வளர்ந்திருந்ததால் அவனை கடிந்த நடுவர் ஒன்னு முடியை வெட்டு இல்ல ஆட்டத்தை விட்டு வெளியேறு  ஆட்டத்தின் நடுவரான ஆலன் மலோனி வற்புறுத்தி உள்ளார்.
இதனால் அந்த மாணவன் வேறு வழி இன்றி தனது தலை முடியை வெட்டிக்கொண்ட பிறகே விளையாடச் சென்றான். இந்த போட்டியின் முடிவில் ஜான்சன் வெற்றி பெறுகிறான்.ஆனால் அவனது வெற்றியை நடுவர் வேண்டா வெறுப்பாக கைதூக்கி அறிவிக்கிறார். இந்த காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவவே இந்த சம்பவம் தொடர்பான அந்த மாணவன் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவன் என்பதால்தான் நடுவர் இந்த அளவுக்கு தொந்தரவு செய்துள்ளார்’ என்று கூறப்பட்டாலும் முடி வெட்டியது கடுமையான சர்ச்சையாக மாறியது ஆனால் விளையாட்டு விதிகளின் படி அதிகமாக முடி வைத்திருக்கக் கூடாது மாணவன் ஆண்ட்ரூ ஜான்சனும் அந்த அளவிற்கு முடி  ஒன்றும் வைத்திருக்கவில்லை.திறமையை காண வேண்டிய கண்ணில் கொடூரமான இனவெறி  எனப் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்