முக்கொம்பு மதகுகள் உடைந்ததற்கு..! பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்..!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!
முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்தன என தெரிவித்தார்.
அப்பொழுது முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.மேட்டூர் அணை திறந்து 40 நாட்கள் ஆன நிலையில் கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
DINASUVADU