முகுல் ரோஹத்கி லோக்பால் தேர்வுக் குழு நடுவராக நியமனம்!
மத்திய அரசு,ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் தேர்வுக் குழு நடுவராக முகுல் ரோஹத்கி நியமிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வுக்குழு நடுவராக இருந்த ((P.P. Rao)) பிபி ராவ் கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானார்.
இதை அடுத்து புதிய நடுவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு இருந்தது. தற்போது அந்தப் பதவிக்கு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கியை நியமித்துள்ளதாக தற்போதைய தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான முடிவு கடந்த 11ஆம் தேதி எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.