முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு..!

Default Image

 

உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது
நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

 

1 – முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப் பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும் .

தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.

2 – முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க
1 – கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
2 – பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
3 – தயிர் – 2 – டீ ஸ்பூன்
4 – எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்
இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு பெரும்.

3 -முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய

அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்