முகக்கலையை கொடுக்கும் காபி பேஸ் பேக்…!!!
அதிகமானோர் ஆசைப்படுவது வயது சென்றாலும் முகம் இளைமையாக தெரிய வேண்டும் என்பது தான். ஆனால் இதற்காக இவர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதற்கான தீர்வு தெரியாமல் சோர்ந்து போனவர்கள் அதிகமானவர்கள். அவர்கள் அனைவரும் இந்த முறைகளை கைக்கொண்டு பாருங்க.
இரண்டு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் தோன்றும். பளிச்சென்று முகம் தோன்ற, கடலை மாவுடன் காபி பவுடரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கி, முகத்தில் அப்லை செய்து காய்ந்தவுடன் கழுவி விட வேண்டும்.