மியான்மர் தான் ரோஹிங்கியா இனமக்களை அழித்தது..!குற்றம்சாட்டிய ஐநா..!!மறுத்த மியான்மர்..!!
ரோஹிங்கியா மக்கள் இனஅழிப்பு தொடர்பான ஐநாவின் குற்றச்சாட்டை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது.
வடக்குப் பகுதியில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கடந்த ஆண்டு மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 7 லட்சம் ரோஹிங்கிய இன மக்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து ஐநா மனித உரிமை ஆணையம் நியமித்த குழுவினர் நடத்திய விசாரணையில் ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவம் இன அழிப்பு முறையில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் மறுத்துள்ளது.
DINASUVADU