மிதி வண்டி வழங்கியதில் முறைகேடு நடைபெற வில்லை – அமைச்சர் செங்கோட்டையன்…!!
விலையில்லா மிதிவண்டிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆயிரத்து 303 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றார்.
dinasuvadu.com