மாநில அளவிலான குத்துச்சண்டை…மதுரையில் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு…!!
மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி 4 நாட்கள் நடைபெறுகிறது. தனியார் கல்லூயில் நடைபெறும் இப்போட்டியில் உத்தரகாண்ட், தெலங்கானா, பீகார், அரியானா கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.போட்டியில் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதி, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடதக்கது.
dinasuvadu.com