மஹாலக்ஷ்மியின் சகோதரன் வலம்புரி சங்கினை பூஜை செய்யும் முறையும்! அற்புத பலன்களும்!
- ஆழ்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் வலம்புரி சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது.
- சங்கு சிறியதாக இருந்தால் பண பெட்டியில் வைத்து விடலாம். பெரியதாக இருந்தால் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
பாற்கடலில் மகாலட்சுமி பிறந்திருந்தாள். அதே பாற்கடலில் தான் சங்கு கிடைப்பதால் சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. அந்த சங்கினை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அந்த சங்கு வலம்புரிச் சங்காக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சங்கில் இருந்து வரும் ஓம் ஒலியானது நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை போக்க வல்லது. அந்த சங்கு சிறிய அளவில் இருந்தால் வீட்டு பீரோவில் பண பெட்டியில் வைத்து விடலாம் பெரியதாக இருந்தால் பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வலம்புரி சங்கினை பூஜை செய்யும்போது ஒரு பித்தளை தாம்பூலத்தில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட சங்கினை வைத்துவிட வேண்டும். கூர்மை பகுதியானது கிழக்கு நோக்கியும், மற்றொரு பகுதி மேற்கு நோக்கியும் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்ய தொடங்கும் நாளானது வளர்பிறை வெள்ளி கிழமையாக இருந்தால் மிக நல்லது. வாரம் ஒரு முறையாவது சங்கினை நன்றாக சுத்தம் செய்து அதனுள் தண்ணீர் மாற்றி பூஜை செய்யவேண்டும். பச்சரிசியை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்.
மகாலட்சுமியின் சகோதரனான சங்கினை கவனிக்காமல் ஒரு மூலையில் வைத்து விடக்கூடாது. அது நமது வீட்டுக்கு நல்லது அல்ல.