மலேரியா நோயை கண்டுபிடிக்கும் நாய்…விஞ்ஞானிகள் அதிரடி கண்டுபிடிப்பு…!!
நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் காலுறையை (சாக்ஸ்) நாய்களிடம் கொடுத்து மோப்ப பிடிக்க செய்து அதன் மூலம் மலேரியா நோயை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆய்வு கவுன்சில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டது.நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் காலுறைகள் சேகரிக்கப்பட்டு நாய்களிடம் மோப்ப சக்திக்கு வழங்கப்பட்டது.
அதில் 70 சதவீதம் பேருக்கு மலேரியா நோய் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. அதற்காக அந்த நாய்களுக்கு சிறப்பு மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டது.