மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!ரூ.1.7 கோடி அபராதம்!
கடந்த 3 ஆம் தேதி ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஆவார். மலேசிய வளர்ச்சி திட்டங்களில் முன்னாள் பிரதமர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.கடந்த மே மாதம் இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.பின்னர் தற்போதைய பிரதமர் மகதீர் முகமது ஊழல் தொடர்பாக நஜீப் ரசாக் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.மலேசியா வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.பின்னர் நேற்று அவரை மலேசிய உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர் அவருக்கு மலேசிய நம்பிக்கை சட்டத்தின் கீழ் 3 குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது .மேலும் ரூ.1.7 கோடி அபராத தொகை செலுத்து உத்தரவிட்டது.நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.