மலேசிய மக்கள் மத்தியில் அச்சம் …!மலேசியாவில் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் சட்டம்?
மலேசிய மக்கள் மத்தியில், மலேசியாவில் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்படும் சட்டம், அரசின் சுய தணிக்கைக்கு பயன்படுத்தப்படுமோ? என்று அச்சம் எழுந்துள்ளது.
பொய்யான செய்தியை பரப்பும் நிறுவனம் மற்றும் செய்தியை எழுதுவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே பிரதமர் நஜீப் ரசாக் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தச் சட்டத்தால் ஊடக சுதந்திரம் பறிபோய் விடும் என்று கூறப்படும் நிலையில் சுய தணிக்கைக்கு உட்படுத்தப்படுமோ என்கிற அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.